மதுரை மலை தீபத்தூண் விவகாரம்:

Zaid Ebrahim Anwari
1 Min Read

உச்சநீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

மதுரை : மதுரை மலை உச்சியில் உள்ள தீபத்தூண் தொடர்பான வழக்கில், அந்தத் தூண் உண்மையில் தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டதல்ல; அது ஆய்வுப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட கட்டமைப்பு மட்டுமே என்று மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Ref.No:ZE-515-024-50

திருக்கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

நவம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், சர்ச்சைக்குரிய தூண் தீபம் ஏற்றுவதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பு அல்ல என்று வாதிட்டார்.

இந்தத் தூண் வரலாற்று ரீதியாகவோ, மத ரீதியாகவோ தீபம் ஏற்றும் வழக்கத்துடன் தொடர்புடையது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், அது Great Trigonometrical Survey எனப்படும் இந்தியாவின் நில அளவை ஆய்வுப் பணிகளுடன் தொடர்புடைய சர்வே நிலையம் அல்லது சர்வே புள்ளியாக அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு இருப்பதாக தமிழக அரசு ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×